இலங்கையில் சுமார் பத்து வீதமான ஆண்கள் வீட்டு வன்முறைகளுக்கு உள்ளாகுவதாக குடும்ப சுகாதார செயலணி தெரிவித்துள்ளது.
வீட்டு வன்முறைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக மித்துரு பியச என்னும் 24 மணித்தியால அவசர அழைப்பு சேவையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் அதிகளவில் வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0702611111 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு எந்தவொரு நேரத்திலும் வீட்டு வன்முறை குறித்து அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் வீட்டு வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு சமூக ஊடக செயற்பாடுகள் மற்றும் அலைபேசி பயன்பாடு என்பன பிரதான ஏதுக்களாக மாற்றமடைந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் மித்துரு பியச திட்டத்தின் பொறுப்பாளர் டொக்டர் ஹேசானி கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.