NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் – யாழில் சம்பவம்!

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின் வீடு திரும்பிய இளைஞனை வீதியில் வழிமறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞனே தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், ஐஸ்கிறீம் வாங்குவது போல பாசாங்கு செய்து, குறித்த இளைஞனின் உடைமையில் இருந்த பணம், மற்றும் கைபேசி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்று இருந்தனர். 

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞன் முறைப்பாடு செய்த பின்னர் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை, அல்வாய் பகுதியில் இளைஞனை வழிமறித்த கும்பல், வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles