NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இளைஞர்களிடையே வேகமாக அதிகரிக்கும் HIV!

கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் HIV தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 327 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேசிய HIV தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வடமேற்கு மாகாண கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த குருநாகல் போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சித்ரன் ஹத்துருசிங்க இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், 15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் HIV நோயால் அதிமாக பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 2003 முதல் HIV பரவுவது படிப்படியாக அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டில் இந்த நோயை அகற்றுவதற்கான ஒரு முறையை தாம் கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நோயாளிகளில் சுமார் 95 சதவீதமானோரை தாம்; சிகிச்சைக்கு பரிந்துரைக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles