NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரேலின் தாக்குதலில் 4 ஈரானிய படையினர் உயிரிழப்பு..!

இந்த மாத தொடக்கத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 4 ஈரானிய படையினர் கொல்லப்பட்டதாக ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நேற்று அதிகாலை தெஹ்ரான் மற்றும் மேற்கு ஈரானுக்கு அருகிலுள்ள ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் பிற இராணுவ தளங்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளது.

இந்தநிலையில், தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதாகக் கூறிய ஈரானின் வெளியுறவு அமைச்சு, ஈரான் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அதன் பொறுப்புகளை நிறைவேற்றும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதியன்று இஸ்ரேலை நோக்கி ஈரானினால் ஏவப்பட்ட சுமார் 200 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இஸ்ரேல் தாக்கியளித்திருந்தது.

இதனையடுத்து, சுமார் 25 நாட்களின் பின்னர், அதற்கான பதில் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது.

Share:

Related Articles