(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இஸ்ரேல் நாட்டிலிலிருந்து இலங்கைக்கு முதல் தடவையாக நேரடி பயணிகள் விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளினதும் சிவில் விமான சேவை அதிகார சபைகள் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இஸ்ரேலின் ‘ஆக்கியா’ (Arkia) விமான சேவைக்குச் சொந்தமான விமானங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கைக்கு வரவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
அதன்படி, புதிய விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, இரண்டு நாட்டு சிவில் விமான போக்குவரத்து துறைகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.