NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈகுவடோரில் ஊரடங்கு!

தென் அமெரிக்க நாடான ஈகுவடோரில் பல கிளர்ச்சிக் குழுக்கள் செயற்படுகின்றன.

அவற்றில் பல குழுக்களை பயங்கரவாத அமைப்புகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த குழுக்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர்.

இதன் காரணமாக குவாயாஸ், லாஸ் ரியோஸ், மனாபி உள்ளிட்ட 7 மாகாணங்களில் உள்நாட்டுக்கலவரம் நிலவுகின்றது.

எனவே அந்நாட்டின் ஜனாதிபதி டேனியேல் நோபோவா குறித்த மாகாணங்களுக்கு இராணுவ அவசர நிலையினை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 20 மாகாணங்களில் இரவு நேரங்களில் ஊரடங்குச் சட்டமானது அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles