ஈரானில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 35 பாகிஸ்தானிய யாத்திரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் யாஸ்ட்டில் உள்ள சோதனைச் சாவடியில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது.
இதன்பின்னர் பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.