உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதியளித்துள்ளது.
குடியரசுக் கட்சியின் எதிர்ப்பின் காரணமாக ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முன்மொழிவு பல மாதங்களாக தாமதமானது.
எவ்வாறாயினும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களை அடுத்து முன்வைக்கப்பட்ட வலுவான கோரிக்கையின் அடிப்படையில் குறித்த நிதியுதவிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி வோல்டிமிர் செலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
“ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் எப்போதும் உலகளாவிய முக்கியத்துவத்தை கொண்டிருக்கும், அதை பாதுகாக்க அமெரிக்கா உதவும் வரை ஒருபோதும் தோல்வியடையாது.” இந்த உதவியானது போர் விரிவடைவதைத் தடுப்பதுடன் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும்” என வோல்டிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.