NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கடந்த மார்ச் மாதம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம், உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த பரீட்சை நடைபெறும் திகதிகளுக்கு அமைய, அடுத்துவரும் சாதாரணதர பரீட்சை உள்ளிட்ட பல பரீட்கைகளுக்கான திகதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால், ஏனைய பரீட்சைகளுக்கான திட்டமிடல் முற்றிலும் ஒழுங்கற்றதாக மாறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles