NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உர மானியத்தின் முதற்கட்டம் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளது..!

பெரும்போகத்துக்கான உர மானியத்தின் முதற்கட்டம் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதன்படி, 678.06 மில்லியன் ரூபாய் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உரமானியத்தின் கீழ், விவசாயிகளுக்கு முதல் கட்டமாக 15, 000 ரூபாயும், 2ம் கட்டமாக 10, 000 ரூபாவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மொத்தமாக 25, 000 ரூபாய் வழங்கப்படும் என கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles