கடந்த சனிக்கிழமையன்று வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் ஆறு அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைக்காலமாக அமெரிக்காவின் பல பகுதிகள் தீவிர வெப்பநிலையை ஏற்பட்டு வருகின்றது. இந்தநிலையில், வானிலை முன்னறிவிப்பாளர்கள் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்களை இந்த மாதத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.