2025ஆம் ஆண்டுக்கான உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி, நாளை முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை குறித்த உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொள்வார் என வெளிவிவகார, அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
இதனை தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு உலக அரசாங்க உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல துறைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.