சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர்.
சமூக நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் பன்முகத்தன்மை கொண்ட இலங்கையை மேம்படுத்தும் போது கற்றுக்கொண்ட பாடங்களின் மூலம் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தும் ‘இமயமலைப் பிரகடனம்’ இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.