ஹோர்ட்டன் சமவெளிக்கு (உலக முடிவு) செல்லும் பிரதான வீதியில் மண்சரிவு காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி, அம்பேவெலயிலிருந்து ரெண்டபொல ஊடாக உலக முடிவுக்கு செல்லும் வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வீதியின் 3 கிலோமீற்றர் தூரத்தில் மண் மேடுகள் வீதியில் சரிந்துள்ளதாக கெப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.