NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு!

சீனாவின் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

228 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 4 இலட்சத்து 22 ஆயிரத்து 349 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 இலட்சத்து 23 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 29 இலட்சத்து 6 ஆயிரத்து 466 பேர் குணமடைந்துள்ளனர். 

ஆனாலும், கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 68 இலட்சத்து 92 ஆயிரத்து 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share:

Related Articles