NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை – Pan American highway !

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையின் பெயர் பான் அமெரிக்கன் (Pan American highway) நெடுஞ்சாலை.
இந்த நெடுஞ்சாலை வடக்கு மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.


இதை உருவாக்குவதற்கான முதல் யோசனை 1923ல் முன்வைக்கப்பட்டுள்ளதோடு இந்த சாலை 2 கண்டங்களை இணைக்கும் ஒரே பாதையாக கருதப்பட்டது.
ஆயினும் பின்னர் இந்த சாலை முக்கிய நெடுஞ்சாலைகளாக பிரிக்கப்பட்டு அலாஸ்காவில் தொடங்கி அர்ஜென்டினாவில் முடியும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 14 நாடுகள் இணைந்து இந்த நெடுஞ்சாலையை உருவாக்கியுள்ளன.
இந்த முழு நெடுஞ்சாலையும் எந்த இடையூறும் இல்லாமல் இருந்தாலும், அதன் ஒரு பகுதி (சுமார் 110 கி.மீ.) இதுவரை முடிக்கப்படவில்லை.
அதனால் இது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.

இது பனாமாவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையில் உள்ளது. இந்த பகுதி டேரியன் கேப் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் என பல சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. மக்கள் பெரும்பாலும் இந்த பகுதியை படகு அல்லது விமானம் மூலம் கடந்து செல்கின்றனர்.
ஒரு நாளைக்கு சராசரியாக 500 கிலோமீட்டர் பயணம் செய்தாலும், இந்த தூரத்தை கடக்க சுமார் 60 நாட்கள் ஆகும்.


கார்லோஸ் சான்டாமரியா என்ற சைக்கிள் ரைடர் இந்த பாதையை 117 நாட்களில் கடந்து முடித்தார். அவரது சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலை மெக்ஸிகோவிலிருந்து அர்ஜென்டினாவின் தலைநகருக்கு செல்கிறது ஆயினும் பல கிளைகளைக் கொண்டுள்ளது.


இந்த வழித்தடங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டால் அதன் மொத்த நீளம் 48,000 கி.மீ.
அமெரிக்காவின் 2 தலைநகரங்களுக்கு (வடக்கு மற்றும் தெற்கு) இடையே பயணம் செய்தால், எங்காவது இந்த பான் அமெரிக்கா நெடுஞ்சாலையை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

Share:

Related Articles