NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகின் மிகவும் வாழத் தகுதியான நகரங்கள் – ஆய்வறிக்கை வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

உலகின் மிகவும் வாழத் தகுதியான நகரங்கள் குறித்த சமீபத்திய அறிக்கையை ‘The Global Liveability Index by the Economist Intelligence Unit (EIU)’ வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆஸ்திரியாவின் வியன்னா நகரம், உலகில் வாழத் தகுதியான நகரமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி, சுகாதாரம், கல்வி, ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணிகள் அந்தந்த தரவரிசைக்கு பயன்படுத்தப்பட்டன.

தரவரிசைப் பட்டியலில் கனடாவின் கல்கரி, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா ஆகிய நகரங்கள் 7ஆவது இடத்தைப் பிடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, உலகின் 173 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

  1. வியன்னா – ஆஸ்திரியா
  2. கோபன்ஹேகன் – டென்மார்க்
  3. மெல்போர்ன் – அவுஸ்திரேலியா
  4. சிட்னி – அவுஸ்திரேலியா
  5. வான்கூவர் – கனடா
  6. சூரிச் – சுவிட்சர்லாந்து
  7. கல்கரி – கனடா
  8. ஜெனீவா – சுவிட்சர்லாந்து
  9. டொராண்டோ – கனடா
  10. ஒசாகா – ஜப்பான்
Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles