உலகில் முதன் முதலாக செயற்கை தொழில்நுட்பத்தினால் (Artificial Intelligence – AI) உருவாக்கப்பட்ட அழகிகளுக்கான அழகுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் AI அழகுப் போட்டியாளர்களின் தோற்றம், இணையத்தில் அவர்கள் ஒரு விடயத்தை கட்டளையிடும் விதம், தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மகுடம் சூட்டப்படவுள்ளது.
World AI Creator Awards – WAICA ஆனது, ரசிகர்களின் விருப்பங்கள் மற்றும் தளங்களின் பயன்பாட்டை வைத்து நிர்ணயிக்கப்படும்.
AIயினால் உருவாக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களை உருவாக்கியவர்கள் நடுவர்கள் முன் செல்ல வேண்டும்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் Miss AIக்கு $5000 பணப் பரிசு வழங்கப்படும். இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கும் பணப் பரிசு உண்டு.
வருகின்ற மே மாதம் 10ஆம் திகதி இந்தப் போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்படும்.
நான்கு பேர் கொண்ட குழுவின் இரண்டு பேர் AI உருவாக்கிய நீதிபதிகள். மற்ற இருவர் மனிதர்கள்.
இந்த போட்டியின் விதிப்படி, போட்டியாளர்கள் முற்றிலுமாக AIயினால் உருவாக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் இதற்காக பயன்படுத்தப்படும் கருவிகளில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.