ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் குடிசை வீடுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கடை இலக்கம் 3 நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (22) இந்த வழக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோதே உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவரையும் விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.