NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஊசி போடப்பட்ட நிலையில் 4 மாத பெண் குழந்தை உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஊசி போடப்பட்ட நிலையில் சுகவீனமடைந்ததாகக் கூறப்படும் 4 மாத பெண் குழந்தையொன்று குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குளியாபிட்டிய – கோமுகொமுவ பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சளி வெளியேற்றம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 4 மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போடப்பட்டதை அடுத்தே இந்த நோய் ஏற்பட்டதாக குழந்தையின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles