ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஊடக நெறிமுறைகள், ஒழுங்கு விதிகளை பின்பற்றி தகவல்களை வெளியிட வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.