NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எம்.ஏ சுமந்திரன் எம். பி பயணித்த வாகனம் விபத்து..!

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பயணித்த வாகனம் இன்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் ஏ9 வீதி – கிளிநொச்சியில் 155 கட்டைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அவரின் சொகுசு வாகனம் மீது எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது எம்..பி இன் வாகனத்திற்கும், மோட்டார் சைக்கிளுக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதெனவும் மோட்டார் சைக்கிளில் சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணமெனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles