எஹலியகொட, உடுவான கெட்டஹெட்டவில் பாரிய மண்சரிவினால் குறைந்தது எட்டு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் எஹலியகொட பிரதேச செயலாளர் எஸ்.ஏ.தில்ருக் கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதியில் காலை முதல் மண்சரிவு அபாயத்தின் அறிகுறிகள் தென்பட்டது.
அப்பகுதியிலிருந்து 43 குடும்பங்களை வெளியேற்றி அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உடனடி நிவாரணம் வழங்குவதற்காக சித்தார்த்த வித்தியாலய உடவனயில் தங்கவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் தாழ்வான பகுதியில் உள்ள கெட்டஹெதி ஓயாவில் மண் அடைப்பு ஏற்பட்டு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.