உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் 11 வீடுகள் நிர்மானிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த 223 வீடுகளை நிர்மானிப்பதற்காக 139 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
கம்பஹா கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகாமையில் கூடுதல் எண்ணிக்கையில் இவ்வாறு வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தை அண்டிய பகுதியில் 144 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மானித்துக் கொடுப்பதற்காக 90.85 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.
கொச்சிகடை தேவாலயத்தை அண்டிய பகுதியில் 8 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 70 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 11 வீடுகள் நிர்மானிப்பதற்காக ஐந்து மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .