NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறைகளில் இருந்த 44 இலங்கையர்கள் விடுதலை!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு ஏப்ரல் மாதம் ரமழான் மாதத்திற்கான அரச மன்னிப்பு வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மன்னிக்கப்பட்ட 44 இலங்கையர்களை எதிர்வரும் நாட்டகளில் பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளை ஒருங்கிணைக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles