NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக கொழும்பு 7 தெவட்டகஹா பள்ளிவாசலில் விசேட வழிபாடுகள்..!

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான சமய ரீதியான ஆசியை பெற்றுக் கொள்ளும் முகமாக கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் ஆபிரகாம் குரேஷி அவர்களின்  ஏற்பாட்டில் கொழும்பு 7 தெவட்டகஹா பள்ளிவாசலில் விசேட வழிபாடுகள் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கொழும்பு  மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பல வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஆபிரகாம் குரேஷி கூறியதாவது,

பாரம்பரிய முஸ்லிம்களின் தேவைகள் பாராளுமன்றில் பேசப்பட வேண்டும் இவை பேசப்படாமையினாலேயே முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டு வருவதாகவும், பாரம்பரிய முஸ்லிம்களினது ஜனநாயக குரல் வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.

அத்தோடு, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அநீதிக்கு எதிராக முதலில் பாராளுமன்றில் குரல் எழுப்பியவர் ரஞ்சன் ராமநாயக்க ஒருவரேயாகும். மேலும் தமது கட்சி மக்கள் மனங்களை வெல்வதன் மூலம் முன்னோக்கி செல்லும் பாதை வலுப்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது கொழும்பு மாவட்ட வேட்பாளர்களின் அணித்தலைவர் பதும் கரனல் மற்றும் வேட்பாளர்கள் பலரும் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles