NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், அக்கட்சியில் இணையுமாறு எஸ்.எம்.மரிக்கார் எம்.பி அழைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தமது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிப்பதற்கும் தயாராகியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியை பூஜ்ஜியமாக்கினார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, தற்போது அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அவருக்கே வாக்களிக்கவுள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன் மூலம் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் மறைமுகமாக கூறியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒருபோதும் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு துரோகமிழைக்காத குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதுடன், இதனால், ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தங்களுடன் இணைந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தியுள்ளார். 

Share:

Related Articles