ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி தனது 97 ஆவது வயதில் இன்று (12) காலமானார்.
இவரின் உடல் நாளை (13) வரை கொழும்பில் உள்ள ஜெயரத்ன மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14 ஆம் திகதி ஹேனகம, பொகுன்விட்டவில் உள்ள அஜந்தா இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, புதன்கிழமை (15) பிற்பகல் 3.30 மணிக்கு பொகுன்விட்டவில் உள்ள கேந்திர மைதானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.