NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐந்து கோடி ரூபா பெறுமதியான 23,000 தொன் செப்பு உலோகம் கைப்பற்றல் !

செப்பு குாழாய் பொருத்திகளை கப்பலில் ஹொங்கொங்கிற்கு அனுப்புவதாகக் கூறி சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 23,000 தொன் செப்பு உலோகத்தை அனுப்பத் தயாராகிக்கொண்டிருந்த போது சுங்க அதிகாரிகளால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏற்றுமதி முனையத்தில் வைத்து செப்பு உலோகம் அடங்கிய கொள்கலன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளனர்.

பேலியகொட பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து செப்பு உலோகங்களை உருக்கி, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை சுங்க அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட செப்பு கையிருப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles