NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தினை நிறுத்த யுக்ரைன் தீர்மானம்!

ரஷ்யாவினால் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குக் குழாய் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கையை இன்று முதல் நிறுத்துவதற்கு யுக்ரைன் தீர்மானித்துள்ளது. 

யுக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஐந்தாண்டு எரிவாயு விநியோக ஒப்பந்தம் இன்றுடன் காலாவதியானதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

2022 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து எரிவாயு இறக்குமதியைக் கணிசமான அளவு குறைத்துள்ளன. 

எனினும், ஸ்லோவோக்கியா மற்றும் ஒஸ்ட்ரியா உள்ளிட்ட சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், ரஷ்யாவிலிருந்து கணிசமான அளவு எரிவாயுவை இறக்குமதி செய்து வருகின்றன. 

எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்பு நாடுகள், ரஷ்ய எரிவாயுவில் தங்கியிருப்பதற்கு மாற்றீடாக கட்டார், அமெரிக்கா மற்றும் நோர்வேயில் இருந்து எரிவாயு மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களைப் பெற்றுக்கொள்வதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles