ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டின் தீவுகளுக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கமானது 4.2 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கிரீஸ் நாட்டில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அஜியா அன்னா , 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஸ்டியாயா மற்றும் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்கியாதோஸ் ஆகிய இடங்களில் குறைந்த அளவிளான நடுக்கம் உணரப்பட்டிருக்கலாம் என தெரிக்கப்பட்டுள்ளது.