NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தும் வர்த்தமானி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஒன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு ஒன்லைன் வர்த்தக தள இயக்குநர் ஒரு தயாரிப்பை விளம்பரப்படுத்தும்போது எந்த பிரதிநிதித்துவத்தையும் மறுப்புகளையும் செய்யக்கூடாது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பில், ஒரு பொருளின் உண்மையான கொள்முதல் விலையானது, தொடர்புடைய தயாரிப்புக்கான ஒன்லைன் வர்த்தக தளத்தில் காட்டப்படும் விலைக்கு சமமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், ஓர்டர் உறுதிப்படுத்தல், போக்குவரத்து மற்றும் தளவாட ஏற்பாடுகள், ஓர்டர்களை இரத்து செய்யும் உரிமை ஆகியவையும் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

Share:

Related Articles