NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒருநாள் போட்டிகளில் புதிய மைல்கல் நாட்டிய இலங்கை !

ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தினை 128 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தொடரின் சம்பியன்களாக வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

மேலும் இந்த வெற்றியுடன் தொடரில் எந்தப் போட்டிகளிலும் தோல்வியுறாமல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் எதிரணிகளின் அனைத்து விக்கெட்டுக்களையும், தொடர்ச்சியாக 10 தடவைகள் கைப்பற்றி வெற்றி பெற்ற அணியாக புதிய மைல்கல் ஒன்றினை நிலைநாட்டியிருப்பதோடு, தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் 10ஆவது வெற்றியினையும் பதிவு செய்திருக்கின்றது.

ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி முன்னதாக ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் ஆரம்பமாகியது.

இப்போட்டிக்கான இலங்கை அணி திமுத் கருணாரட்னவிற்கு உபாதை சிக்கல்கள் காரணமாக ஓய்வு வழங்க, தனன்ஞய டி சில்வா மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் இலங்கை குழாத்திற்குள் மீண்டிருந்தனர். மறுமுனையில் நெதர்லாந்து இப்போட்டியில் நோவா குரோஸிற்கு ஒருநாள் அறிமுகம் வழங்கியிருந்தது.

Share:

Related Articles