NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒஸ்கார் விருது பெற்ற நடிகர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

“பாராசைட்” (Parasite) திரைப்படத்துக்காக ஒஸ்கார் விருது பெற்ற தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன், உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தென் கொரிய பொலிசார் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

48 வயதான இவர் மத்திய சியோலில் உள்ள பூங்கா ஒன்றில் காரில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லீ சன்-கியூன் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் , ஆனால் அவர் ஒரு குறிப்பை எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles