திருகோணமலையில் கந்தளாய் பகுதியில் இளைஞர் ஒருவர் ஓடும் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு திருகோணமலையிருந்து கொழும்புக்குச் சென்ற இரவு நேர தபால் கடுகதி புகையிரதத்தில் மோதியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த 24 வயதுடைய இளைஞர் திருமணமானவர் என்றும் அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டே தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.