இளம் பிக்கு ஒருவர், தாம் சாமானியராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரிடம் பிடிபடவில்லை எனவும், தம்மை கைது செய்யும் வரை ஓயப் போவதில்லை எனவும் தெரிவித்து, கம்பஹா யக்கல பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துறவி தனது தாயுடன் நேற்று (04) பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன் பின்னர் பொலிஸார் குறித்த பிக்குவை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது எட்டு வருடங்களுக்கு முன்னர் தான் சாமானியராக இருந்த போது செய்த இந்த திருட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் வரை தமக்கு நிம்மதி இல்லை என பிக்கு கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சாமானியராக இருந்த போது தாம் செய்த இந்த திருட்டுகளால் அடிக்கடி துன்பமடைவதாகவும், அந்த திருட்டுகளுக்கு தண்டனை பெற்று மன அமைதி பெற வேண்டும் என்பதாலேயே பொலிஸில் சரணடைய தீர்மானித்ததாகவும் பிக்கு பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.