இந்தியா, தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் பெண்ணொருவர் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
எல்பி நகர் சிவ கங்கா காலனியைச் சேர்ந்த சரோஜினி என்பவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் நரசம்மா என்பவரிடம் ரூபாய் 20,000 கடன் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொடுத்த கடனை நரசம்மா திருப்பிக் கேட்டதில், இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த சரோஜினி நரசம்மாவின் முகத்தில் சுத்தியலைக் கொண்டு பயங்கரமாகத் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நரசம்மா உயிரிழந்தார்.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் நரசம்மாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சரோஜினி மீது வழக்குப் பதிவு செய்து பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.