கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, உருகுவே தலைநகர் மான்டேவீடியோ மற்றும் மாநகர பகுதிகளில், அவசரநிலை பிரகடன் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின், 60 சதவீத அணைக்கட்டுகள் வறண்டு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சமாளிக்கும் விதமாக, தலைநகர் மற்றும் மாநகர் பகுதிகளில், அதிபர் லுய்ஸ் லக்கால்லே போவ் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.
அடுத்த ஒரு சில வாரங்களுக்கு நாட்டில் மழைக்கான அறிகுறி எதுவும் இல்லாத காரணத்தாலும், தற்போதைய கடுமையான தண்ணீர் பற்றாக்குறையாலும் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைநகர் மான்டேவீடியோவில் உள்ள 21,000 குடும்பங்களுக்கு இலவசமாக 2 லிட்டர் தண்ணீரை அரசு வழங்கும் என்றும், குடிநீர் போத்தல்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் ஊருகுவே அரசு அறிவித்துள்ளது.