NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து வர்த்தகர் ஒருவர் உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு 07 – ரோஸ்மீட் பிளேஸில் உள்ள கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிருளப்பனை – சுனேத்ரா வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறுந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Share:

Related Articles