NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டாவளை பிரதான வீதி புனரமைப்பு பணிகள் கிடப்பில்..!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பிரதான வீதியானது புனரமைப்பு பணிகளுக்காக கடந்த 08.08.2024 அன்று வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக வீதியில் பள்ளம் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் அவ் வீதியை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். 

மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் வீதியில் பயணிக்கும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உயிர் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது. 

மேலும் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தபட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து தாம் பாதுகாப்பாக குறித்த வீதியில் பயணம் செய்வதை உறுதிப்படுத்துமாறு  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

Related Articles