NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்பார்வை குறைப்பாடுள்ளவர்களும் TV பார்க்கலாம் !

ஸ்மார்ட்போன்இ தொலைகாட்சி சந்தைகளில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங் சமீபத்தில் தான் கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

இந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தனது 2023 டிவி மற்றும் மானிட்டர் மாடல்களில் புதிய அம்சத்தை வழங்குகிறது.

புதிய அம்சம் சீகலர்ஸ் மோட் (SeeColorsMode) என்று அழைக்கப்படுகிறது. புதிய அம்சம் நிறங்களை கண்டறியும் குறைபாடு கொண்டவர்களுக்கும் சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளது.


சீகலர்ஸ் மோட் பயனர்களுக்கு ஒன்பது வித்தியாசமான பிக்சர் பிரீசெட்களை வழங்குகிறது. இந்த அம்சம் ரெட், கிரீன் மற்றும் புளூ நிற அளவுகளை மாற்றியமைத்து, திரையில் பயனர்கள் நிறங்கள் இடையே வித்தியாசப்படுத்திக் கொள்ள உதவுகிறது.

2017 ஆண்டு ஆப் வடிவில் வழங்கப்பட்ட சீகலர்ஸ் அம்சம் தற்போது டிவி மற்றும் மானிட்டர்களின் அக்சபிலிட்டி மெனுக்களில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
2023 மாடல்களை ஏற்கனவே வாங்கி பயன்படுத்தி வருபவர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்குவதற்கான மென்பொருள் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

இதுதவிர சாம்சங் நிறுவனம் கலர் விஷன் அக்சஸபிலிட்டி சான்றினை டியுவி ரெயின்லேன்ட்-இடம் பெற்றுள்ளது. எங்கும் ஸ்கிரீன், அனைவருக்கும் ஸ்கிரீன்கள் என்ற சாம்சங் நிறுவன இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய அக்சஸிபிலிட்டி அம்சம் வழங்கப்படுகிறது.

Share:

Related Articles