கனடாவின் இராணுவத் தளபதியாக இருந்து வரும் வெய்ன் அர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரி ஜென்னி கரிக்னன் என்பவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார்.
தற்சமயம் ஆயுதப் படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசார தலைவராக சேவையாற்றி வரும் ஜென்னி, சுமார் 35 வருடங்களாக இராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி 2008ஆம் ஆண்டில் கனடா, ஆயுதப் படைகளின் வரலாற்றை உற்று நோக்கினால் போர் படை பிரிவுக்கு தலைமைவகித்த முதல் பெண் என்ற பெருமையும் இவரையே சாரும்.
மேலும் ஆப்கானிஸ்தான், சிரியாவில் கனடா படைகளை வழிநடத்தி, 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையில் ‘நேட்டோ மிஷன் ஈராக்’கையும் வழிநடத்தினார்.
இந்நிலையில் கனடா நாட்டின் வரலாற்றில் ஒரு பெண் இராணுவளத் தளபதியாவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இராணுவத் தளபதி பொறுப்புக்கு ஆண்களே நியமிக்கப்படுவர். ஆனால் அந்த வரலாற்றையே மாற்றியெழுதும் விதமாக ஒரு பெண்ணை இராணுவத் தளபதியாக நியமித்திருப்பது, பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்பதை அனைவருக்கும் உரக்கக் கூறுவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.