கனடா – டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தங்க திருட்டு தொடர்பாக நேற்றைய தினம் (18) ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழர் ஒருவரும் அடங்குகின்றார்.
சுமார் 1 வருட காலத்திற்கு முன்னர் பியர்சன் விமானநிலையத்தில் வைத்து சுமார் 20 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 400 kg எடைகொண்ட 6600 தங்க கட்டிகள் 09 பேர் கொண்ட குழுமூலம் கொள்ளையடிக்கப்பட்டது .
இதனை தொடர்ந்து நேற்று குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் பொலிஸாரால் அடையாளம் காணப்படுள்ளனர் .இதில் தமிழர் ஒருவர் இடம்பெறுள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
37 வயதான ஒருவரே குறித்த திருட்டில் பங்கேற்றதாக சந்தேகத்தின் அடிப்படிடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது துப்பாக்கி கடத்தல்கள் ஆயுத விநியோகங்கள் தொடர்பாக பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளன .
இவர் மட்டுமல்லாமல் இவருடன் சகாக்கள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.