NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனமழை காரணமாக மட்டு.நகர் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை தொடக்கம் பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 123.3 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பின் தாழ் நிலங்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் மழைபெய்யும் நிலைமை காணப்படுவதனால் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share:

Related Articles