அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிடவிருக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் கருப்பரா? அல்லது இந்தியரா? என்று முன்னாள் ஜனாதிபதி டொனால்ட டிரம்ப் கேள்வியெழுப்பியுள்ளாா்.
இந்தியாவிலிருந்து வந்த சியாமளா கோபாலனுக்கும் ஜமாய்க்காவைச் சோ்ந்த ஜோசப் ஹரிஸுக்கும் பிறந்த கமலா ஹரிஸ்இ இதுவரை தன்னை இந்திய வம்சாவளிப் பெண் என்று மட்டுமே காட்டிக் கொண்டிருந்ததாகவும்இ தோ்தலுக்காக திடீரென அவா் தன்னை கருப்பினப் பெண்ணாக முன்னிறுத்துகிறாா் எனவும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த சா்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த கமலா ஹரிஸ்இ ‘இது டிரம்ப்பின் வழக்கமான பிரிவினைவாத மற்றும் மரியாதை தெரியாத பேச்சு’ எனத் தெரிவித்துள்ளார்.