கம்பளையிலிருந்து தொலஸ்பாகை பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியில், கடல்பொக்கு எனும் பிரதேசத்தில் நேற்றிரவு (27) பாரிய வெடிப்பு ஏற்பட்டுக் குறித்த வீதி தாழிறங்கியுள்ளது.
இதனால் குறித்த பிரதான வீதியூடான போக்குவரத்து இன்று (28) காலை முதல் முற்றாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் காலையில் தொழிலுக்குச் செல்லும் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை குறித்த பிரதான வீதியூடான போக்குவரத்து தற்போது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கடையொன்றும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.