NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கற்கோவளம் இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை..!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் இராணுவ முகாமை 14 நாட்களுக்குள் அகற்றி குறித்த காணியை காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

மூவருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் காணியே விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று(18) மாலையில் இருந்து இராணுவ முகாமை அகற்றும் பணி இடம்பெற்று வருகிறது.

குறித்த காணி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கற்கோவளம் கடற்கரையுடன் அண்டிய பகுதியில் மூன்று சகோதரர்களுச் சொந்தமான காணி. இக் காணியை இரு தடவைகள் இராணுவ முகாமுக்காக சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது அரசியல் தலைவர்கள், காணி உரிமையாளர்களுடன் இணைந்து போராடி அளவீட்டுப் பணியை தடுத்து நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1995 ம் ஆண்டு முதல் குறித்த இராணுவ முகாம் அங்கு இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles