NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலி கோட்டையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கான மகிழ்ச்சியான தகவல்!

காலி கோட்டை இன்று பாரிய நெருக்கடிக்குள் சென்றுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செலவின தலையீடுகள் மீதான விவாதத்தில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், காலி கோட்டையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் அறவிடப்படாது.

அருங்காட்சியகங்கள் மற்றும் பிற சுவாரசியமான இடங்களைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளிடம் மட்டுமே பராமரிப்பு பணிகளுக்காக பணம் வசூலிக்கப்படுகின்றது.

காலி கோட்டை இன்று பாரிய நெருக்கடிக்குள் சென்றுள்ளது. கோட்டையின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு பணம் தேவை. ஆனால் ஹோட்டல்களுக்குள் நுழைபவர்களிடமிருந்தோ அல்லது தங்கியிருப்பவர்களிடமிருந்தோ பணம் வசூலிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles