(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா கேட் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, இதனைத் தெரிவித்ததாக தெரிவித்தார்.
அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர்.
இதேவேளை, காணாமல் போன இலங்கையர் ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்ததாக காமினி செனரத் யாப்பா தெரிவித்ததோடு, அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.