NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காஸாவில் ஒவ்வொரு நாளும் 4 மணிநேர போர் நிறுத்தம்…!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், வடக்கு காஸாவில் இருந்து பொது மக்கள் வெளியேறுவதற்காக இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் 4 மணிநேரம் போரை நிறுத்தவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இரு தரப்புகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் வெறுப்பும், வெறுப்புமிக்க பேச்சுகளும், குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐ.நா. பொது சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

எல்லா மனிதர்களும் பிறப்பின் அடிப்படையில், சமமான சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரிமையை கொண்டவர்கள். எனவே வெறுப்பு மற்றும் வெறுப்புமிக்கப் பேச்சுக்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என அவர் கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles